For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேஸ் போடுங்க சார்.. திடீர் அரசியல்வாதி விஷாலுக்கு எதிராக தீயாக கொதிக்கும் சுயேச்சைகள்!

நடிகர் விஷாலுக்கு எதிராக ஆர். கே நகரில் சுயேச்சை வேட்பாளர்கள் தீயாக வேலை செய்து வருகின்றனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ

    சென்னை : நடிகர் விஷாலுக்கு எதிராக ஆர்கே நகர் தேர்தல் களத்தில் இருக்கும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் முதல் அனைத்திலும் ஜனநாயகத்தை நிலை நாட்டி வருகின்றனர். இன்று போலி கையெழுத்து போட்ட விஷால் மீத சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்குவதாக நடிகர் விஷால் சனிக்கிழமை அறிவித்தார். அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலரும் போர்க்கொடி தூக்கினர். அரசியல் ஆசையில் இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயக்குனர் சேரன் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்.

    நடிகர் விஷால் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு சினிமா வாழ்க்கையும் அஸ்தமிக்கும். 2 மாதங்களில் அவர் ஓரம் கட்டப்படுவார் என்று தெரிவித்தார்.

    சொல்வதற்கு ஒன்றுமில்லை

    சொல்வதற்கு ஒன்றுமில்லை

    இதே போன்று பாஜகவின் தமிழிசையும் மற்ற சுயேச்சை வேட்பாளர்களைப் போலவே நடிகர் விஷாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் அவ்வளவு தான். அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்.

    மனு தாக்கலில் இருந்தே தொடக்கம்

    மனு தாக்கலில் இருந்தே தொடக்கம்

    இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கலுக்கு விஷால் வருவதற்கு முன்னரே சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 45 பேர் விஷால் வரிசையில் வந்து தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு விஐபி என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று தேர்தவ் அதிகாரியுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டன. இதனால் விஷால் டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருந்து மனு தாக்கல் செய்து விட்டு வந்தார்.

    சுயேச்சைகள் கோரிக்கை

    சுயேச்சைகள் கோரிக்கை

    இன்று விஷாலின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் மீது பிரிவு 420 மற்றும் 467 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுயேச்சைகள் கோரிக்கை விடுத்துள்ளன. வேட்புமனுவில் போலியான கையெழுத்து இடம்பெற்றதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்க அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    விஷாலுக்கு எதிராக

    விஷாலுக்கு எதிராக

    ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வந்த விஷாலுக்கு தொடக்கம் முதலே சுயேச்சைகள் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றன. மொத்தத்தில் அரசியல் கட்சிகளின் உதவியுடன் சுயேச்சைகள் விஷாலுக்கு எதிராக தீயாக வேலை பார்க்கிறார்கள் என்றே தொகுதி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    English summary
    Independent candidates from the nominations of Vishal continuously watching him and complainting to election officer now they seeking case filing against him for forging signatures in the nomination papers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X