For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆதரவு.. வெள்ளையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி நடக்கவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்துக் கடைகலும் மூட

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: வரும் 25ஆம் தேதி நடக்க இருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான கடைகள் மூடப்படும்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 40 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வங்கிப் பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை இந்தியாவில் நடக்காத துயரமாக, 40 நாட்களாக தமிழக விவசாயிகள், விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணாப் போராட்டம், தரையில் மண்சோறு சாப்பிடும் போராட்டம், அங்கப் பிரதட்சணப் போராட்டம், பெண் போல் வேடமணிந்து போராட்டம் என விதவிதமான போராட்டங்களை விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்குச் செய்து வருகின்றனர்.

 டெல்லி சாலையில் நிர்வாணமாக தமிழக விவசாயிகள்

டெல்லி சாலையில் நிர்வாணமாக தமிழக விவசாயிகள்

தமிழகத்தில் போராடி வரும் விவசாயிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி போலீசார் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று அழைத்துச் சென்று, அவர்களிடமிருந்து வெறும் மனுக்களை மட்டும் வாங்கி அனுப்பி வைத்தது. இதனால் கடும் விரக்தி அடைந்த விசாயிகள், தங்கள் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக டெல்லி சாலியில் ஓடினார்கள்; புரண்டார்கள். அதைப் பார்த்தவர்கள், உலகுக்கு சோறிடும் விவசாயிக்கு இப்படி ஒரு நிலையா என கண்களில் நீர் விட்டனர்.

 விவசாயிகள் மீது தடியடி

விவசாயிகள் மீது தடியடி

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரணியாக சென்ற அவர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

 மு. க. ஸ்டாலின் சந்திப்பு

மு. க. ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை எதிர்க்கட்சி தலைவரும் திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் சந்தித்தார். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.கனிமொழியும் அவர்களை நேரில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தார்.

 அனைத்துக் கட்சி கூட்டம்

அனைத்துக் கட்சி கூட்டம்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிடட் கட்சிகள் கலந்துகொண்டன. அதனையடுத்து, முழு அடைப்புப் போராட்டம் வரும் 25ஆம் தேதி நடத்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

 வணிகர் சங்கங்கள் ஆதரவு

வணிகர் சங்கங்கள் ஆதரவு

முழுஅடைப்புக்கு முதலில் விக்க்கிரமசிங்க ராஜா தலைமையிலான வணிகர் சங்கப் பேரமைப்பி மறுப்புத் தெரிவித்தது. பிறகு அவர்களும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆகையால் தமிழகம் முழுவதும் 25ஆம் தேதி அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும்.

English summary
Tamilnadu vanikar sanga peravai president Vellaiyan supports Bandh on 25th April 2017. This Bandh meant for showing support to Farmers protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X