நிலத் தகராறில் மிரட்டிய கூலிப் படை... போலீசார் அதிரடி கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: நிலவிற்பனையில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தரப்பினர் கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றுள்ளது. அதில் 9 பேர் கொண்ட கூலிப்படையை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனியைச் சேர்ந்த ராஜ் மற்றும் முத்துலட்சுமி இருவருக்கும் இடையே நில விற்பனையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்துலட்சுமி, ராஜை கொல்வதற்கு கூலிப் படையை ஏவியுள்ளார்.

 Gangsters threatened Raju in land selling issue and the were arrested

அந்தக் கூலிப் படையை சேர்ந்தவர்கள் ராஜுக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். அதையடுத்து காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலை மிரட்டலில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட கூலிப் படை கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அவர்களிடமிருந்த பெட்ரோல் குண்டுகள் மற்றும் அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Theni two persons involved and fought for selling land. And Muthulakshmi threatened Raju with gansters and they were arrested by police
Please Wait while comments are loading...