குழந்தையை தாக்கிய செஞ்சி பெண்ணின் கள்ளக்காதலன் கைது.. பிரேம்குமார் என்ற பெயரில் அறிமுகமான மணிகண்டன்
அறந்தாங்கி: செஞ்சியில் குழந்தையை தாக்கிய பெண்ணின் கள்ளக்காதலனை தனிப்படை போலீஸார் அறந்தாங்கியில் கைது செய்தனர். இந்த மணிகண்டன் தன்னை பிரேம்குமார் என கூறியே துளசியிடம் பேசியுள்ளார். இவர் எதற்காக துளசியிடம் தனது பெயரை மாற்றிக் கூறினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் ஊரடங்கால் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.

செல்போன்
அப்போது துளசியின் செல்போனை எடுத்து பார்த்த போது ஒன்றரை வயதுள்ள இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி அதை வீடியோவாகவும் துளசி பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

துளசி கைது
இதையடுத்து சித்தூரில் இருந்த அந்த பெண் துளசியை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இதையடுத்து முதலில் அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அவர் இது போல் குழந்தையை தாக்கினார் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததை துளசியின் கணவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலை விட முடியாத நிலை
இதையடுத்து துளசியை மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மனநலம் நன்றாக இருப்பதாக மருத்துவர் சான்றிதழ் அளித்தார். இதையடுத்து அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் குறித்து ஒப்புக் கொண்டார். மேலும் கள்ளக்காதலை விட முடியாததால் கணவர் மேல் இருந்த கோபத்தில் குழந்தையை தாக்கியதாக கூறினார்.

குழந்தையை தாக்கி வீடியோவாக எடுத்த துளசி
மேலும் குழந்தையை தாக்கி அதை வீடியோவாக எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்ததாகவும் பகீர் தகவலை தெரிவித்தார். இதையடுத்து கள்ளக்காதலன் மணிகண்டனை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் அறந்தாங்கியில் உள்ள தனது சித்தியின் மகன் வீட்டில் இருப்பதை அறிந்த போலீஸார் அவரை கைது செய்து விழுப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications