குழந்தையே வேண்டாம் பாஸ்: இப்படி சொல்வது நம் இந்திய பெண்கள் தான்
சென்னை: நவீன யுகத்தில் பல பெண்கள் குழந்தை பெறாமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தால் அடுத்தபடியாக அவர் எப்பொழுது தாயாவார் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தற்போது உள்ள பெண்களில் பலர் அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் குழந்தை பெற விரும்புவது இல்லை.
நாமே இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்கிறார்கள். குழந்தை பெற்றால் தாங்கள் வேலைக்கு செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் குழந்தை என்று இருந்தால் அது தங்களை கட்டிப்போடும் பந்தமாக இருப்பதாக கருதுகிறார்கள்.
குழந்தை பெறாமல் இருப்பதால் அதை நினைத்து வருத்தம் இல்லை. பெற்றால் தான் பிள்ளையா, உறவினர்களின் பிள்ளைகள் மீது பாசம் காட்டுவோம். அதனால் குழந்தைகள் இல்லை என்று தோன்றாது என்கிறார்கள்.
கூட்டு குடும்பம் என்ற முறை கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் குழந்தை வேண்டாம் என்ற முடிவை கணவனும், மனைவியும் தான் எடுக்கிறார்கள். எங்களுக்கே நேரம் போதவில்லை இதில் குழந்தைக்கு எப்படி என்று கேட்கும் பெண்களை தற்போது பார்க்க முடிகிறது.
திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் இணையதளங்களில் விளம்பரம் செய்யும் பெண்களில் சிலர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். மாசு அதிகம் உள்ள, பாதுகாப்பற்ற உலகில் புதிய உயிரை வேறு கொண்டு வர வேண்டுமா என்று நினைப்பதாக சில பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தான் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications