ஓடியாங்க ஓடியாங்க.. போனா வராது.. ஜிஎஸ்டி வரி... ஹூண்டாய் கார்கள் ரூ. 2.75 லட்சம் வரை தள்ளுபடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் தங்களிடம் உள்ள பொருள்களை சலுகை விலையில் விற்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு என்ற ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் அந்த வரி அமல்படுத்தினால் வீட்டு உபயோக பொருள்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்டவைகளுக்கு தற்போது 15 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.

 சலுகை விலை

சலுகை விலை

மேலும் கூடுதல் வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் சுமையை தடுப்பதற்காக தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களை சலுகை விலையில் வழங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 கட்டண சலுகை

கட்டண சலுகை

அந்த வகையில் தற்போது ஏசி வாங்குவோருக்கு ஸ்டெபிலைசர், இன்ஸ்டலேஷன் கட்டணம் இலவசம் உள்ளிட்ட சலுகைகளோடு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் சலுகைகளை அள்ளி வீசிவருகின்றன.

 கார்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை...

கார்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை...

மேலும் சுசுகி மாருதி உள்ளிட்ட கார்களுக்கு ரூ.35, 000 வரை தள்ளுபடியும், ஹூண்டாய் கார்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தள்ளுபடி மழையில் வாடிக்கையாளர்கள் நனைந்து வருகின்றனர்.

 திருப்பதி லட்டுக்கு...

திருப்பதி லட்டுக்கு...

புவி சார் குறியீடு கொண்டுள்ள பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு இல்லை. திருப்பதி லட்டு, காஞ்சி பட்டு, மதுரை சுங்குடி புடவைகள் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST bill will be implemented from July 1st throughout India. Before that implementation home appliances companies are giving discount for customers.
Please Wait while comments are loading...