பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆர்த்தியை விரட்டிய மக்கள்.. வாக்குகளை அள்ளும் ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அதேநேரத்தில் மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஓவியா அதிக வாக்குகளை குவித்து தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தங்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

இந்தியில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பலகோடி ரூபாய் செலவில் தமிழிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இதில் 15 நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.

இதில் வாரம் தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படும் நபர்கள் மக்களின் வாக்குகளை பொறுத்து நிகழ்ச்சியில் நீடிக்கின்றனர்.

 வெளியேறிய பரணி

வெளியேறிய பரணி

இதுவரை நடிகை அனுயா, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ உடல்நிலைக் குறைவால் வெளியேறினார். நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் வெளியேறினார்.

 வெளியேற்றப்பட்ட ஆர்த்தி

வெளியேற்றப்பட்ட ஆர்த்தி

இந்நிலையில் நடிகை குண்டு ஆர்த்தி நேற்று வெளியேற்றப்பட்டார். பல டிவிஸ்ட்களுக்குப் பிறகு அவர் வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே அடங்கா பிடாரித்தனமாக பேசிவந்த நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 கண்ணீருடன் வெளியேறிய ஆர்த்தி

கண்ணீருடன் வெளியேறிய ஆர்த்தி

இந்நிலையில் ஆர்த்தி நேற்று வெளியேற்றப்பட்டார். கண்ணீருடன் வெளியேறிய அவருக்கு சக குடும்பத்தினர் பிரியாவிடை கொடுத்தனர்.

Anbumani Ramadoss says 'People can put vote for me instead of Oviya'-Oneindia Tamil
 அதிக வாக்குகளை குவிக்கும் ஓவியா

அதிக வாக்குகளை குவிக்கும் ஓவியா

அதேநேரத்தில் கடந்த 2 வாரங்களாக சக குடும்பத்தினரால் நாமினேட் செய்யப்பட்ட நடிகை ஓவியா அதிக வாக்குகளை குவித்து தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நீடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Harathi evicted from the Biggboss program. At the same time Actress Oviya gets so many votes and continueing in the Biggboss house.
Please Wait while comments are loading...