For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மண்டையை பிளக்கும் வெயில்: திருத்தணி 109, வேலூர் 108 டிகிரி செல்சியஸ் பதிவு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசை கடந்தது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதில் வேலூர், திருச்சி, சென்னை, திருத்தணி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், வெப்பத்தின் அளவு சதத்தை கடந்து பதிவாகி வருகின்றது. இதனால் பகல்நேரங்களில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Heavy heat in Tamil Nadu

இதில், தமிழகத்தில் நடப்பாண்டு, வழக்கத்தை விட 5 செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளும், தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையமும் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன

இந்நிலையில், இன்று வேலூர், கரூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கடலூர், திருத்தணியில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தியது. வேலூரில் 108 டிகிரி செல்சியஸ், கரூரில் 105 டிகிரி செல்சியஸ், அரக்கோணத்தில் 104 டிகிரி செல்சியஸ், திருவண்ணாமலையில் 103 டிகிரி செல்சியஸ், கடலூரில் 100 டிகிரி செல்சியஸ் என பதிவானது. இதில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகினது.

English summary
On the day of Vellore recorded 108 degrees Celsius, 105 degrees Celsius at Karur, 103 degrees Celsius at Tiruvannamalai and 100 degrees Celsius in Cuddalore. The maximum temperature recorded was 109 degrees Celsius in Tiruthani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X