சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: மாணவ-மாணவியர் அவதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்ல மாணவ-மாணவியர் அவதிப்படுகிறார்கள்.

சென்னையில் 9 பள்ளிகளை தவிர பிற பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

Heavy rain in Chennai on tuesday

குரோம்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, நாவலூர், போரூர், சிட்லபாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.

தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை கொட்டுகிறது. செங்கல்பட்டு, பொத்தேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூரிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, தேனாம்பேட்டையில் மிதமான மழை பெய்கிறது. திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவியர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain is lashing various parts of Chennai on tuesday. Students find it difficult to go to schools.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற