தொடரும் கன மழை: நாகை, திருவாரூர் புதுக்கோட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை தொடருவதால் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain: Holiday declared for schools in Nagapattinam district

இந்த நிலையில் கனமழை தொடரும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் மழையும் நீடித்து வருகிறது.

இதனிடையே நாகையில் மழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை தொடருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to the heavy rain, a holiday has been declared for all schools in Nagapattinam District.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற