சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. டிராபிக் ஜாமால் மக்கள் அவதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் இன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை திடீரென மாறியது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்தது.

Heavy traffic jam in chennai due to heavy rain

சென்னையில் ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

திடீர் மழையால் அமைந்தகரை, அண்ணாநகர், அம்பத்தூர், அசோக் நகர், அடையாறு, ராயப்பேட்டை, சூலைமேடு, மதுரவாயல், அண்ணாசாலை, ஒயிட்ஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு சென்ற ஊழியர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy traffic jam in chennai due to heavy rain. Annasalai, Choolamedu, Aminjikarai area and all heavy traffic jam. People who went of work facing trouble to return home.
Please Wait while comments are loading...