For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபெரா குற்றவாளி தினகரன் தேர்தலிலேயே போட்டியிட முடியாது... சட்டம் சொல்வது இதுதான்!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளியான டி.டி.வி தினகரன் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்கின்றர் சட்ட வல்லுநர்கள்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளியான டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபெரா வழக்கின் குற்றவாளியான டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1995, 1996ம் ஆண்டுகளில் டி.டி.வி. தினகரனின் வங்கிக் கணக்குகளில் பெருமளவு பணம் வெளிநாடுகளில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஹைகோர்ட் தீர்ப்பு

ஹைகோர்ட் தீர்ப்பு

இவ்வழக்கில் தினகரனுக்கு ரூ31 கோடி அபராதம் விதித்தது ஃபெரா வாரியம். இத்தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் ரூ28 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இவ்வழக்கில் டி.டி.வி. தினகரன் குற்றவாளியே என்றும் அவர் அபராதத் தொகை செலுத்தியே ஆக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாது

6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாது

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபரால் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடவே முடியாது. சரி, ஃபெரா வழக்கில் தினகரன் குற்றவாளி என்று மட்டும்தானே சொல்லியிருக்கிறதே... அவருக்கு எப்படி இது பொருந்தும் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தெந்த குற்றங்கள் செய்திருந்தால் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்கிற ஒரு பட்டியல் இடம்பெற்றுள்ளது. "Disqualification on conviction for certain offences" என்ற அந்த பிரிவின் (e) the Foreign Exchange (Regulation) Act, 1973 (46 of 1973) அதாவது ஃபெரா சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம்தானே...

அபராதம்தானே...

ஃபெரா வழக்கில் டி.டி.டி.வி. தினகரனுக்கு அபராதம் மட்டும்தானே விதிக்கப்பட்டுள்ளது... அதை செலுத்திவிட்டால் டி.டி.வி. தினகரனால் போட்டியிட முடியுமே என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அபராதம் விதித்தாலும் போட்டியிட முடியாது

அபராதம் விதித்தாலும் போட்டியிட முடியாது

ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மேலே நாம் குறிப்பிட்டுள்ள "Disqualification on conviction for certain offences" பிரிவில்

[shall be disqualified, where the convicted person is sentenced to-

(i) only fine, for a period of six years from the date of such conviction;

(ii) imprisonment, from the date of such conviction and shall continue to be disqualified for a further period of six
years since his release.]

அதாவது குற்ற வழக்குகளில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்ட நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முதல் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்; சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனை பெற்று விடுதலையானது முதல் மேலும் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்

என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. ஆக ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளி டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி போட்டியிடவே தகுதியற்றவரே என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

English summary
T T V Dinakaran is the AIADMK's candidate to contest the R K Nagar by-elections. Dinakaran who is Sasikala's nephew will contest the seat that was held by J Jayalalithaa and it may be recalled that he was recently asked to pay up a penalty of Rs 25 crore in connection with a Foreign Exchange Regulation Act violation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X