For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனையா?... இந்த நம்பருக்கு கூப்பிடுங்க

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புகார் அளிக்க செல்போன் எண்களையும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா அறிவித்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு கடந்த 1ம்தேதி முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஹெல்மெட்டுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பல வியாபாரிகள் அவற்றின் விலையை இரு மடங்கு, 3 மடங்கு என உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்கள்.

Helmet issues: Labor commissioner P. Amutha warns shoppers

இதனால் ஹெல்மெட் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஒருமித்த குரல் எழுந்தது.

இதையடுத்து, கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின்படி, அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் பொட்டல பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை ஆய்வர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்சமயம், ஹெல்மெட்(தலைகவசம்) உள்ளிட்ட பல பொட்டலப் பொருட்கள் அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் சட்டவிதிகளுக்கு மாறாக, விற்கப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன.

விற்பனை விலையை(எம்.ஆர்.பி.) விட அதிக விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் துறை ஆய்வர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.

இது தொடர்பாக புகார்கள் ஏதும் இருப்பின் நுகர்வோர் அந்தந்த மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தொழிலாளர் ஆய்வர்கள் செல்போன் எண்கள்.

1. சென்னை-1 ம் வட்டம்- 9445398738

2. சென்னை-2 ம் வட்டம்- 9445398739

3. சென்னை-3 ம் வட்டம்- 9445398740

4. காஞ்சிபுரம் - 9445398743

5. திருவள்ளூர் -9445398745

6. கடலூர் - 9445398746

7. வேலூர் -9445398741

8. விழுப்புரம் - 9445398747

9. திருவண்ணாமலை-9445398742

10. திருச்சி -9445398756

11. தஞ்சாவூர் -9445398757

12. திருவாரூர் -9445398758

13. பெரம்பலூர்- 9445398759

14. திண்டுக்கல் -9445398760

15. கரூர் - 9445398754

16. தேனி -9445398762

17. மதுரை -9445398761

18. விருதுநகர் - 9445398763

19. சிவகங்கை -9445398767

20. இராமநாதபுரம் - 9445398764

21. திருநெல்வேலி -9445398768

22. தூத்துக்குடி -9445398769

23. நாகர்கோவில் -9445398771

24. கோவை -9445398752

25. திருப்பூர் - 9445398772

26. சேலம் -9445398749

27. ஈரோடு -9445398751

28. நாமக்கல் -9445398750

29. கிருஷ்ணகிரி-9445398748

30. குன்னூர் -9445398753,

ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம என ஆணையர் அமுதா கூறியுள்ளார்.

English summary
Labor commissioner P. Amutha warns shoppers if helmet sale more than Maximum Retail Price
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X