“தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியாது”- ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சாதி பெயர்கள் நீக்கம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-க்குள் முடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளன. எனவே அரசாணையை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த மனு புதன்கிழமை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'மக்களின் மனதில்தான் பாகுபாடு இருக்கிறது. அதையே மாற்ற முயல வேண்டும். அதை விடுத்து தெருப் பெயர்களை மாற்றுவதால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர இயலாது' என்றனர்.
அதற்கு அரசு தரப்பில், 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனத்திலும் மாற்றம் வரும்' எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications