திருப்பூர் சங்கர் படுகொலை வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் சங்கர்-கவுசல்யா தம்பதி. வெவ்றேறு ஜாதியை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 13-ந் தேதி சங்கர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தாக்குதலில் பலத்த காயத்துடன் கவுசல்யா உயிர்தப்பினார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, கவுசல்யாவின் பெற்றோர் சின்னசாமி-அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டி உட்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், நீதிபதி அலமேலு நடராஜன் விடுமுறையில் இருப்பதால், வரும் 22-ந் தேதியன்று அவர்களை ஆஜர்படுத்துமாறு கூடுதல் நீதிபதி யமுனா உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications