For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கம்"முன்னு இருந்து சீட்டைப் பிடித்த ராஜன் செல்லப்பா... !

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை வடக்குத் தொகுதியின் வேட்பாளராகியுள்ளார் மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா. உண்மையில் இது இவருக்கு 2வது சான்ஸில் கிடைத்த யோகமதான். ஆனாலும் அதை சத்தமில்லாமல் அவர் சாதித்த விதம்தான் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் எம்.எஸ்.பாண்டியன். இதனால் பாண்டியன் தரப்பு பயங்கர உற்சாகத்தில் மூழ்கிப் போயிருந்தது. அண்ணன் எம்.எல்.ஏ ஆயிட்டாரு என்ற ரேஞ்சுக்கு கொண்டாட்டத்திற்குப் போய் விட்டனர் பாண்டியன் ஆதரவாளர்கள்.

ஆனால் தடாலடியாக பாண்டியனைத் தூக்கி ஓரமாக போட்டு விட்டு செல்லப்பாவை தூக்கி வந்து வேட்பாளராக்கி விட்டார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்

எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்

எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து வருபவர் பாண்டியன். எப்படியும் சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார் பாண்டியன். அதற்கேற்ப சீட்டும் கிடைக்கவே மகிழ்ச்சி அடைந்தார்.

செல்லப்பாவுக்கு ஷாக்

செல்லப்பாவுக்கு ஷாக்

மறுபக்கம் திருப்பரங்குன்றம் தொகுதியில் சீட் கேட்டிருந்தார் மேயர் ராஜன் செல்லப்பா. இவர் புறநகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் ஆகாது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் முதல் லிஸ்ட்டில் பெயர் வராததால் செல்லப்பா ஏமாற்றமடைந்தார்.

கப்சிப்

கப்சிப்

ஆனாலும் முகத்தில் எந்த அதிருப்தியையும் காட்டாமல் தன் பாட்டுக்கு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் செல்லப்பா. அவரது ஆதரவாளர்களும் கூட அமைதியாக வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

திடீர் அழைப்பு

திடீர் அழைப்பு

இந்த நிலையில்தான் சென்னைக்கு அழைக்கப்பட்டார் செல்லப்பா. உற்சாகமடைந்த செல்லப்பா உடனே கிளம்பிப் போனார். அங்கு போனவருக்கு மதுரை வடக்கு சீட் கொடுக்கப்படும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அமைதி

மீண்டும் அமைதி

இதனால் செல்லப்பா தரப்பு பெரும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தது. அதே சமயம், மறுபடியும் ஆர்ப்பாட்டம எதுவும் இல்லாமல் அமைதியாக மதுரை திரும்பி தேர்தல் வேலைகளில் குதித்துள்ளனராம்.

இந்த அடக்கம்தான்...!

English summary
Madurai mayor Rajan Chellappa has got the seat in Madurai North. He has replaced MS Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X