ராமராஜ்யத்திற்கான போராட்டம்..முற்றும் துறந்த நிலை.. ஆன்மீக பாதையில் பயணிக்கும் அண்ணாமலை
திருக்கழுகுன்றம்: தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருக்கழுகுன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையில் உள்ள சிவனடியார் சிவதாமோதரனை, கே.அண்ணாமலை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
கட்சியினரிடையே பேசிய அண்ணாமலை, தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஆன்மிக ஆட்சி வேண்டும் என்று தெரிவித்தார்.

எது ஆன்மீகம்
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஆன்மிகம் என்பது கோயிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது மக்களுக்கான சிந்தனை. சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது. இளைய தலைமுறையினர் வாட்ஸ் - அப், பேஸ்புக், யு டியூப், நல்ல உணவு, நல்ல உடை என வாழ்க்கையை தொடர்கின்றனர்.

ஆன்மீக ஆட்சி
இளைய தலைமுறையினர் சிவாச்சாரியார்களாகவும், முற்றும் துறந்தவர்களாக வாழ்க்கை பாதையில் பயணிக்க வேண்டும். அதைவிட மிக முக்கியமானது இருப்பவன், தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது.

ராம ராஜ்ஜியம்
ஆசை, காமம், குரோதம், பகை போன்ற எதுவும் இல்லாமல் சமநிலையில் அரசியல் செய்யக்கூடிய ஒரு மனிதர் வரும்போது ராமராஜ்ஜியம் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். ஏனென்றால் சமுதாய மாற்றம் வரும்போது, சந்ததியினரிடையே மாற்றம் ஏற்படும்.

ஆன்மீக பாதையில் பயணம்
நானும் முற்றும் துறந்த மனிதனாக முயற்சி எடுத்து, அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் என்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்த அண்ணாமலை இளைஞர்கள் ஆன்மீக பாதைக்கு திரும்ப வேண்டும் என்று தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications