For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய்க்கிழமை தீபாவளி, திங்கள் ஆபீஸுக்கு போகணுமா?: எனக்கு காய்ச்சல் பா!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை வருவதால் திங்கட்கிழமை மட்டும் லீவு போட்டால் சனி, ஞாயிறு என செவ்வாய் வரை 4 நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்கலாம் என்று அனைவரும் திட்டமிட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி மக்கள் புத்தாடை எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். அதுவும் பெண்கள் இந்த பண்டிகைக்காக வந்துள்ள லேட்டஸ்ட் மாடல் புடவைகளை கடை, கடையாக ஏறி இறங்கி வாங்கி வருகிறார்கள்.

பாவம் கணவன்மார்கள் தான் மனைவிகள் குஷியாக ஷாப்பிங் செய்வதை பார்த்து மனசுக்குள்ளேயே அழுகின்றனர்.

பட்டாசு

பட்டாசு

தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தீபாவளி அன்று மழை பெய்து பட்டாசு வெடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை குட்டீஸ்களுக்கு.

ஜாலி மூடு

ஜாலி மூடு

தீபாவளி அடுத்த வாரம் தான் என்றாலும் பலரும் தற்போதே கொண்டாட்ட மூடில் ஜாலியாக உள்ளனர். பண்டிகைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.

லீவு

லீவு

தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை வருகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவு திங்கட்கிழமை ஒரு நாள் அலுவலகத்திற்கு போக வேண்டுமா, வேண்டாம் அன்றைக்கு நாம லீவு போட்டுவிடலாம் என்று பலர் முடிவு செய்துவிட்டனர்.

பாஸ்

பாஸ்

தீபாவளிக்காக திங்கட்கிழமை லீவு வேண்டும் என்று கேட்டால் பாஸ் தர மாட்டார். அதனால் திங்கட்கிழமை காலை போன் செய்து எனக்கு உடல்நலம் சரியில்லை, குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று ஏதாவது பொய் சொல்லிக்கலாம் என்று பலர் உள்ளனர்.

ஹய்யா ஜாலி

ஹய்யா ஜாலி

சனி, ஞாயிறு, திங்கட்கிழமை(நாம போடும் லீவு), செவ்வாய்க்கிழமை என தொடர்ந்து நான்கு நாட்கள் ஜாலியாக வீட்டில் இருக்கலாம் என்று வேலைக்கு செல்பவர்கள் குஷியாக உள்ளனர்.

English summary
People of TN are already in a festive mood though Diwali is on november 10th. Many office goers have decided to apply for leave on monday so that they can enjoy the festive season for four days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X