For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து மதத்தை பற்றி விமர்சனம் செய்தால் திருத்திக்கொள்ள வேண்டியதுதானே.. கமல் பேட்டி

நான் இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்று பேசுவதில்லை என்று நடிகர் கமல் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்து மதத்தை விமர்சித்தது பற்றி கமல் பேட்டி- வீடியோ

    சென்னை: நல்ல விமர்சனத்தை நான் எதிர்கொள்வேன். வன்முறை எந்த மதமானாலும் அதை எதிர்ப்பேன் என்று நடிகர் கமல் கூறியுள்ளார்.

    நடிகா் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் புதிய செயலி ஒன்றை சென்னை தி.நகாில் நற்பணி மன்ற உறுப்பினா்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தாா்.

    சமூகத்தில் நடைபெறக்கூடிய பிரச்சினைகள் தொடா்பாக அனைவரிடமும் விவாதிக்க இந்த செயலி பயன்படும் என்று தொிவித்தாா். #maiamwhistle, #theditheerpomvaa #virtouscycles #kh என்ற ஹேஷ்டேக்கில் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து அனைவரும் விவாதிக்கலாம் என்று தொிவித்துள்ளாா்.

    தொடர்ந்து பேசிய கமல் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். இந்து விரோதி என்று சித்தரிக்கப்படுவது பற்றியும், வழக்கு தொடரப்பட்டிருப்பதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

    இந்துத்துவா கேள்விக்கு பதில்

    இந்துத்துவா கேள்விக்கு பதில்

    வன்முறை என்பது எந்த மதமானாலும் நிகழக் கூடாது. அனைத்து சமூகத்திலும் எனக்கு நண்பா்கள் உள்ளனா். இந்துகளை புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணமில்லை. இருப்பினும் இந்து விரோதியாகத்தான் நான் சித்தரிக்கப்படுகின்றேன்.

    அக்கறை உள்ளது

    அக்கறை உள்ளது

    உண்மையை சொன்னதற்கு தண்டனை கொடுத்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வேன்
    இந்த தேசத்தில் எத்தனை இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதைவிட எனது குடும்பத்தில் உள்ள இந்துக்கள் மீது அக்கறை
    எனது குடும்பத்தார் அன்பை தர மறுத்துவிட்டால் நான் மண்டியிட்டு அழுதுவிடுவேன்.

    சுட்டிக்காட்டுவேன்

    சுட்டிக்காட்டுவேன்

    இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்று நான் ஆரம்பிக்க மாட்டேன். சினிமாவில் நல்ல விமர்சனத்தை நான் எதிர்கொள்வேன். அதை என் அடுத்த படங்களில் திருத்திக்கொள்வேன். அதே போல தீவிரவாதம், வன்முறை எந்த மதமானாலும் அதை எதிர்ப்பேன். இந்து மதத்தில் வன்முறை இல்லை என்று கூற முடியாது. அதை சுட்டிக்காட்டுவது தவறில்லை. அதைத்தான் நான் செய்கிறேன்.

    இந்து விரோதியல்ல

    இந்து விரோதியல்ல

    அனைத்து சமூகத்திலும் எனக்கு நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள். என்னை இந்து விரோதி என்று கூறுகிறார்கள். நான் பிறந்தது நான் பிராமண சமூகத்தில்தான். என் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.

    English summary
    Kamal Haasan has said that he will never allow violence in the name of Religion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X