சிவகாசி பட்டாசு ஆலை விபத்து... ஒரு தொழிலாளி பலி, மூவர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகாசி: சிவாகாசியில் இன்று நடந்த பட்டாசு ஆலை விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் நான்கு பேரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அதில் சிகிச்சை பெற்று வந்த நாதன் என்ற தொழிலாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

சிவாகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் என்னும் ஊரில் செல்வம் என்பவர் அரசிடம் முறைப்படி அனுமதி பெறாமல், பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இந்த தொழிற்சாலையில் இன்று ஃபேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெடிபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

In Sivakasi Thiruthangal crackers factory accident happened

காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நாதன் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

சிவகாசியில் அனுமதி பெற்று 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆனால் இங்கு அரசு வகுத்துள்ள பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக பின்பற்றபப்டுவதில்லை. இந்நிலையில் அனுமதி இல்லாமல் இயங்கும் தொழிற்சாலைகளில் முற்றிலும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.

அப்படி விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவர். ஆனால் அங்கு வெறும் 16 படுக்கைகள் கொண்ட தீக்காயப் பிரிவு மருத்துவ சிகிச்சை அறைகளே இருப்பதால் பாதிக்கபப்டுபவர்களுக்கு சரியான, முழுமையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Sivakasi Thiruthangal, crackers factory fire accident happened. In that accident four laborers wounded.
Please Wait while comments are loading...