விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும்! - வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியனைப் போல இந்தியாவும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.

India also remove the ban on LTTE

விடுதலைப் புலிகள் இயக்கத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நேற்று நீக்கியது.

இந்நிலையில், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

மேலும், விடுதலை புலிகள் மீதான தடை நீக்கத்தால் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று வைகோ கூறினார்.

Vaiko Story

ஐரோப்பிய யூனியனின் இந்த தீர்ப்புக்கு தமிழக தலைவர்கள், மு.க.ஸ்டாலின், நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK Chief Vaiko has urged the Indian Govt to remove ban on LTTE
Please Wait while comments are loading...