ரஜினிகாந்த் கட்சியில் தொழிலதிபர்கள், நடிகர்கள் ஆதிக்கம்.. ரசிகன் கதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினிகாந்த் வெப்சைட்டில் தாமரை சின்னம் திடீரென மாயமானது ஏன்? பாம்பு உருவம் ஏன்?- வீடியோ

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்ததுமே அவரை சந்திக்க பல தொழிலதிபர்கள் அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த நிலையில்தான் லைக்கா நிறுவன இந்திய கிளை தலைவர் ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்த் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார். இதற்காக தனது பதவியையே ராஜினாமா செய்துள்ளார் அவர்.

  இனிமேல் இப்படியான தொழிலதிபர்கள் பலரும் ரஜினிகாந்த்துக்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் கூறுகின்றன.

  நன்கொடை பணம்

  நன்கொடை பணம்

  தொழிலதிபர்கள் ஆதரவு இல்லாமல் நமது நாட்டில் கட்சி நடத்துவது சாத்தியமில்லாதது. அவர்கள் வழங்கும் நன்கொடைகளை கொண்டே தேர்தல் செலவுகளை ஈடுகட்டுகின்றன கட்சிகள். பிரச்சாரத்திற்கு பணம், வாக்காளர்களுக்கு பணம், தொண்டர்களுக்கு பணம் என பல கோடிகள் புரளும் துறையாக உள்ளது.

  தொழிலதிபர்கள் ஆதரவு

  தொழிலதிபர்கள் ஆதரவு

  இவ்வாறு தொழிலதிபர்களிடம் பணம் பெற்று கட்சி நடத்தினால், அந்த கட்சி ஆட்சிக்கு வரும்போது, தொழிலதிபர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனால்தான் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலில் பணத்தை தொழிலதிபர்களிடமிருந்து நன்கொடையாக பெறுவதை கட்சிகள் நிறுத்த வேண்டியது அவசியமாகிறது.

  கேஜ்ரிவால் வசூல்

  கேஜ்ரிவால் வசூல்

  ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய கொள்கை இதுதான். கேஜ்ரிவால் பல்வேறு நகரங்களில் விருந்து நிகழ்ச்சி நடத்தி ஆயிரக்கணக்கில் வசூல் செய்து கட்சி நடத்தினார். டெல்லி முதல்வராகவும் வளர்ந்தார். ஆனால் டெல்லி, பஞ்சாப்பின் சில பகுதிகளை தாண்டி அக்கட்சியால் வளர முடியவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை முக்கிய காரணம்.

  தொழிலதிபர்கள் ஆர்வம்

  தொழிலதிபர்கள் ஆர்வம்

  இந்த நிலையில் ரஜினிகாந்த்தை சந்திக்க தொழிலதிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என ரஜினிகாந்த் அறிவித்துள்ளதால், நிதி அதிகம் தேவைப்படும். இந்த நிலையில், ராஜுமகாலிங்கம் போன்ற முக்கிய புள்ளிகள் அவரது கட்சியில் சேருகிறார்கள். ராஜு மகாலிங்கம் சினிமா படம் எடுத்து வினியோகம் செய்வதற்கு உதவிய லைக்கா நிறுவன உயர் அதிகாரி. ஆனால் தமிழக பிரச்சினைகள் எதிலும் பங்கெடுத்தது இல்லை.

  கட்சியில் பங்கு

  கட்சியில் பங்கு

  இதேபோல நடிகர் ராகவா லாரன்ஸ் விரைவில் ரஜினிகாந்த் கட்சியில் இணைய உள்ளாராம். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்தார். ஆனால், மெரினா கடற்கரையில் தடியடி நடந்தபோது அந்த பக்கம் வர முடியவில்லை. பின்னர் வேறு எந்த பிரச்சினைகளிலும் தலைகாட்டவில்லை. இன்னும் பல தொழிலதிபர்களும், சினிமா பிரபலங்களும்தான் ரஜினிகாந்த் கட்சியில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறார்கள் என தெரிகிறது. சாமானியர்களுக்கு அங்கே பதவிகள் கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Raghava Lawrence will soon join Rajinikanth's party. Many industrialists and cinematic celebrities are going to play a major role in the Rajinikanth party. Whether the ordinary people get positions there, is the million dollar question.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற