சென்னை துறைமுகம் வந்தது ஐஎன்எஸ் போர்க்கப்பல்.. பொதுமக்கள் தினமும் பார்வையிடலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகம் வந்துள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

7,500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். போர்க்கப்பல் 173 மீ. நீளமும், 14.3 மீ. அகலமும் கொண்டது. இந்த போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

INS war ship arrives at Chennai

இக்கப்பலில் கரையின் இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஷ் ஏவுகணை, வான் இலக்கை தாக்கி அழிக்கும் பராக் ஏவுகணை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இதுதுவிர 2 ஹெலிகாப்டர்களும் கப்பலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொண்டு அழிக்கும் திறன் கொண்டது.

அதிநவீன இந்த போர்க் கப்பல் இன்று காலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. போர்க்கப்பலை மாணவ- மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் வரவேற்று நெகிழ்ச்சி வரவேற்பு அளித்தனர்.

இந்த போர்க்கப்பலை இன்று மாலை முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்த கப்பலின் சின்னத்தில் நீலநிற கடலும், பின்னணியில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
INS Chennai gets warm welcome by school children at port, and people can visit the ship.
Please Wait while comments are loading...