For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா”- உலக மகளிர் தினம்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று உலக மகளிர் தினம்....கிட்டதட்ட 100 வருடங்களாக பெண்களுக்காக கொண்டாடப்படும் ஒரு நாள்...

இன்றைய "மகளிர் தினம்"கிட்டதட்ட 26 நாடுகளில் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடியாது.

மகளாய்,தாயாய்,சேவகியாய்,கல்வியாளராய்,கப்பலோட்டியாய்,கவிதாயினியாய் என்று பல பரிமாணங்களில் மின்னும் பெண் சாதனையாளர்களுக்கான நாள் இன்று.

இன்றைய பரந்த உலகத்தில் பெண்களின் பங்கு மிக அதிகம்.தடைகளை உடைத்தெறிந்து,அதிகார ஆண்களுக்கு மத்தியில் தைரியமாய் மிளிரும் இந்த பெண் சுதந்திரம் நமக்கு எளிதாக கிடைத்த ஒன்று அல்ல.

சிறையை உடைத்து வெளியே வந்தவள்:

சிறையை உடைத்து வெளியே வந்தவள்:

வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

உரிமை வென்ற நாள்:

உரிமை வென்ற நாள்:

உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டம், அத‌‌ன் வெ‌ற்‌றிகள் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

மறுக்கப்பட்ட கல்வி:

மறுக்கப்பட்ட கல்வி:

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

ஆணுக்கு பெண் இளைப்பில்லை:

ஆணுக்கு பெண் இளைப்பில்லை:

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் "அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் "எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.

இணையான ஊதியம் கிடைக்கவில்லை:

இணையான ஊதியம் கிடைக்கவில்லை:

எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌த் த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது.அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை. இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

பகல் கனவு பலிக்காமல் போனது:

பகல் கனவு பலிக்காமல் போனது:

இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.

அடிமை விலங்கை உடைத்தெரிந்த பெண்கள்:

அடிமை விலங்கை உடைத்தெரிந்த பெண்கள்:

அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உரிமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

பெண்கள் மாநாடு:

பெண்கள் மாநாடு:

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் "கிளாரே செர்கினே" ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌

முக்கிய கோரிக்கை:

முக்கிய கோரிக்கை:

அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய கருத்தாக மார்ச் மாதம் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா என்ன.. ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

உரிமைக்குரல்:

உரிமைக்குரல்:

இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

வென்ற மகளிர் தின கோரிக்கை:

வென்ற மகளிர் தின கோரிக்கை:

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன.

English summary
International Women’s Day, which has existed for more than 100 years, was the product of an era marked by rapid change and upheaval in the industrialized world. As the planet's population grew and the demand for labor increased, and as new ideologies took shape, women were thrust into a brave new world and confronted with a host of challenges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X