For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைய வேண்டும்: கருணாநிதியை சந்தித்த ஜவாஹிருல்லா பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

Jawahirullah
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணையவேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தனர்.

அந்த கட்சியின் மூத்த நிர்வாகியும், சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை கருணாநிதியிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, இணை செயலாளர் ஆருண், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் அப்துல் சமது, துணைத் தலைவர் குனங்குடி ஆர்.எம்.அனீபா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்தேன்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைய வேண்டும். மதசார்பற்ற அணிகள் ஒரே அணியில் இருக்க வேண்டும். விஜயகாந்தை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

English summary
MMK chief M H Jawahirullah and party senior leaders called on DMK president M Karunanidhi on Thursday in Chennai Gopalapuram residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X