ஜெயலலிதா உண்மையிலேயே என்று இறந்தார் என்பது தெரிந்துவிட்டது: சசிகலா வழக்கறிஞர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெயலலிதா இறப்பு பற்றி சசிகலா வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி-வீடியோ

  சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5ம் தேதி தான் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுவாமிநாதன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை பார்த்த ராஜம்மாள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

  விசாரணை முடிந்த பிறகு ராஜாசெந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

  இறப்பு

  இறப்பு

  5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு நான் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்யத் துவங்கினேன். அவரின் திசுக்களை பார்த்தபோது அவர் 15 மணிநேரத்திற்குள் தான் இறந்திருக்க வேண்டும் என்று சுதா சேஷையன் தெரிவித்தார்.

  சாட்சியம்

  சாட்சியம்

  வீட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பிறகே ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்து உயிருடன் இருப்பது போன்று நாடமாடியதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை என்பது சுதா சேஷையனின் சாட்சியம் மூலம் தெரிய வந்துள்ளது. 5.12.2016 அன்று தான் ஜெயலலிதா இறந்தார் என்பது உறுதியாகிவிட்டது.

  இசிஜி

  இசிஜி

  5.12.2016 அன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் நிலையை பார்த்துவிட்டு எந்த முன்னேற்றமும் இல்லை என்றனர். அவரின் இ.சி.ஜி. ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாக அவர்கள் கூறிய பிறகே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் அன்று இரவு எக்மோ கருவியை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது என சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

  ஆவணம்

  ஆவணம்

  முன்னதாக 3.12.2016 அன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் இதயம் நன்றாக உள்ளது என்று கூறி ஆவணத்தில் கையெத்திட்டனர். அந்த ஆவணம் விசாரணை ஆணையம் முன்பு சமர்பிக்கப்பட்டுள்ளது.

  செய்தி

  செய்தி

  ஜெயலலிதா எங்கள் அனைவரையும் வரவழைத்து நான் இறந்துவிட்டதாகவும், நான் தாக்கப்பட்டதாகவும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது. அதனால் மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள் என்று கூறினார் என வெங்கட்ரமணன் மற்றும் ராமமோகனராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

  எக்மோ

  எக்மோ

  ஜெயலலிதாவை யாரோ ஆணிக்கட்டையால் அடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரை ஆணிக்கட்டையால் தாக்கியதற்கான தடயமே இல்லை என்று சுதா சேஷையன் தெரிவித்துள்ளார். எக்மோ கருவியை அகற்றியபோது தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு இருந்ததாக ராமமோகனராவ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 22 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது என்றார் செந்தூர்பாண்டியன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sasikala's lawyer Raja Senthur Pandian said that it is proved clearly that former Chief Minister Jayalalithaa passed away on 5.12.2016 and not before that.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற