சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் ஜெயக்குமார் .. சசி, தினகரனை பாராட்டியதால் பெரும் அமளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் 2017-2018 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அரசு தாக்கல்செய்யப்போகும் பட்ஜெட் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Jayakumar present budget in TN assembly

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக குலவிளக்கே .... நாடித்துடிப்பே என்று ஜெயலலிதாவிற்கு புகாழாரம் சூட்டினார். தொடர்ந்து பட்ஜெட் வாசிக்கும் முன்பாக ஜெயலலிதா உறங்கும் திசை நோக்கி வணங்குவதாக கூறிய அவர், டிடிவி தினகரன், சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவர் பட்ஜெட் உரையை நிறுத்தினார். சபையில் மயான அமைதி நிலவியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Finance Minister is presenting budget in TamilNadu assembly.
Please Wait while comments are loading...