சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் ஜெயக்குமார்... ஸ்டாலின் விளாசல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் சூப்பர் டூப்பர் முதல்வராக ஜெயக்குமார் செயல்படுகிறார் என ஸ்டாலின் தெரவித்துள்ளார். தமிழகத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக செயல்தலைவரும் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது

அலுவல் ஆய்வுக்குழு முடிவுப்படி சட்டசபையை கூட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்திற்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டசபையை கூட்ட வேண்டும்

சட்டசபையை கூட்ட வேண்டும்

குடிநீர் பஞ்சம், நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்த பேச சட்டசபையை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ப.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனைகள் அரசியல் ரீதியாக இருக்க கூடாது என்றும் தெவிரித்தார்.

அந்த ரெய்டுலாம் என்னாச்சு?

அந்த ரெய்டுலாம் என்னாச்சு?

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் நடந்த சிபிஐ ரெய்டை அவர்கள் சட்டரீதியாக சந்திப்பார்கள். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை எந்த நிலையில் உள்ளது ? அதனை அரசு விளக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சூப்பர் டூப்பர் முதல்வர்

சூப்பர் டூப்பர் முதல்வர்

மேலும் சூப்பர் டூப்பர் முதல்வராக ஜெயக்குமார் செயல்படுகிறார் என்றும் ஸ்டாலின் விளாசினார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் ஸ்டாலின் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin slams Jayakumar works as super dooper CM of Tamilnadu. He said that there is no water in Tamilnadu for drink.
Please Wait while comments are loading...