மதுவால் ஏற்படும் உயிரிழப்புக்கு ஜெயலலிதா தான் பொறுப்பு... வைகோ சுளீர்
தூத்துக்குடி: மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஜெயலலிதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தமாகா வேட்பாளர் கதிர்வேலை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ புதூரி்ல் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் பல ஆண்டுகளாக மதுவை எதிர்த்து போராடி வருகிறேன். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சசிபெருமாள் உயிரிழந்தார். மதுபான கடையை அகற்றுதற்காக உண்ணாவிரதம் இருந்த எனது தாய் உயிரிழந்தார்.

தமிழத்தில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு ஜெயலலிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வரகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அரசியல் கட்சியினர் பல இடங்களில் பேசுவதால் மட்டும் மாற்றம் ஏற்படாது.
தமிழகத்தில் புதிதாக ஓட்டு போட உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர் கூறுகையில் மது குடித்து விட்டு யாரும் என் கூட்டத்திற்கு வர கூடாது. இது என் கட்சிகாரர்களுக்கு மட்டுமல்ல. கூட்டணி கட்சிகளுக்கும் பொருத்தும் என ஒரே போடாக பேட்டார்.
இதனிடையே விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே வைகோ பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் முடிந்து பாடல்கள் போடப்பட்டன. அது முடியும் வரை காத்திருந்தார் வைகோ.
ஆனால் பாடல்கள் தொடர்ந்து போடப்பட்டதால் இடையூறாக இருப்பதாகவும் இது திமுகவின் சதி எனவும் குற்றம்சாட்டினார். மேலும் வேறு ஒரு நாளில் பிரச்சாரம் செய்வதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் வைகோவின் பேச்சை கேட்க காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications