For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா உணவு குறிப்புகளையும் மருந்துகளையும் குறித்து வைத்தது வழக்கமான ஒன்று- தினகரன்

ஜெயலலிதாவின் ஆடியோ திட்டமிட்டே தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்று டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

மதுரை : ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, பதிவு செய்யப்பட்ட ஆடியோ தற்போது திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை மறைக்க முடியாது என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

Jayalalithaa Audio released as planned says TTV Dhinkaran

அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். எனவே, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடுவதே, மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இந்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகும். மத்திய, மாநில அரசுகள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தனது உணவுக்குறிப்புகளையும், உட்கொள்ளும் மருந்துகளைக் குறித்து ஜெயலலிதா எப்போதும் குறித்துவைப்பதுவழக்கம். ஆனால்,அவை இந்த சமயத்தில் வெளியாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை மூடி மறைக்க அரசு முயற்சி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Jayalalithaa Audio released as planned says TTV Dhinkaran. AMMK deputy General Secretary TTV Dhinakaran says that, Jayalalithaa had a Habit of making notes of her medicine but the audi released to fade out thoothukudi firing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X