For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காத்திருந்த 290 புதிய பேருந்துகள்… 'ரைட்' சொல்லி ஓட வைத்த ஜெ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பணிமனைகளில் காத்திருந்த புதிய பேருந்துகளுக்கு இன்றுதான் விமோசனம் கிடைத்துள்ளது. 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

55 சிற்றுந்துகளும் ஜெயலலிதாவால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டன. மொத்தம் 87 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பேருந்துகள் மற்றும் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சி மாவட்டம் - உப்பிலியாபுரத்தில் 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை, ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிபாளையத்தில் 1 கோடியே 82 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டிடம் மற்றும் ஓட்டுநர் தேர்வுத்தளம்.

திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரத்தில் 81 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன பகுதி அலுவலகக் கட்டிடம் உள்பட, 19 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

போக்குவரத்துத்துறை கட்டிடங்கள்

போக்குவரத்துத்துறை கட்டிடங்கள்

திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி, திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி மற்றும் திருப்புவனம், திருவண்ணாமலை மாவட்டம் - சேத்துப்பட்டு, சேலம் மாவட்டம் - ஓமலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - ஒண்டிப்புதூர் (கூடுதல் பணிமனை), புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை.

 ஆக மொத்தம் ரூ. 19.53 கோடி

ஆக மொத்தம் ரூ. 19.53 கோடி

தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு, கரூமொர் மாவட்டம் - குளித்தலை, தேனி மாவட்டம் - குமுளி (லோயர் கேம்ப்), மதுரை மாவட்டம் - செக்கானூரணி ஆகிய இடங்களில் 12 கோடியே 17 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பணிமனைகள்; என மொத்தம் 19 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை கட்டிடங்களையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

290 புதிய பேருந்துகள்

290 புதிய பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் கோட்டம் சார்பில் 52 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் கோட்டம் சார்பில் 41 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர் கோட்டம் சார்பில் 29 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் கோட்டம் சார்பில் 47 பேருந்துகள்;

கொடியசைத்து

கொடியசைத்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் சார்பில் 104 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி கோட்டம் சார்பில் 17 பேருந்துகள்; என மொத்தம் 58 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 290 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிற்றுந்துகள் துவக்கம்

சிற்றுந்துகள் துவக்கம்

மக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் கோட்டம் சார்பில் 7 சிற்றுந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர் கோட்டம் சார்பில் 44 சிற்றுந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் கோட்டம் சார்பில் 4 சிற்றுந்துகள், என மொத்தம் 9 கோடியே 15 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 55 சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்து, 5 பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கினார்.

விமோசனம் கிடைத்தது

விமோசனம் கிடைத்தது

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை முதல்வர் பதவியிழந்தார் ஜெயலலிதா. இதனை அடுத்து புதிதாக வாங்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், ஜெயலலிதா வருகைக்காக பல மாதங்களாக அந்தந்த பணிமனைகளிலேயே காத்திருந்தன. இது குறித்து எதிர்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

முதல்வரானதும்

முதல்வரானதும்

கோவையை தவிர்த்து சென்னை, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட 7 போக்குவரத்து கழகங்களின் பெரிய பணிமனைகளில் இந்தப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின்னர் 290 புதிய பேருந்துகளை ரைட் சொல்லி துவக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா

English summary
Chief Minister Jayalalithaa launched 290 new buses on Thursday in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X