For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை செலுத்தும் செயற்கை நுரையீரல்.. இப்படித்தான் வேலை செய்யும்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நுரையீரல் செயல்படாத நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜனை செலுத்தும் கருவியாகும்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 12 மணி நேரம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம்.

1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது.

இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை உபகரணம் உண்டு. இந்த கருவியும் பலனிக்காதபோதே ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்படும். இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த உபகரணம்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த உபகரணம், ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளும். ஆக்சிஜனை சேர்த்து, கார்பன் டயாக்சைடை வெளியேற்றும். இதயம், நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும்.

கார்பன் டையாக்சைடு ரத்தத்தில் அதிகம் சேரும்போது அது உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும். ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போதுதான், இந்த கருவி மிகுந்த அவசியப்படுகிறது.

இதற்காக, catheter என்ற சிறு கருவி (பேஸ்மேக்கரை போல), இதயத்தின் அருகேயுள்ள மைய ரத்த நாளத்தில் பொருத்தப்படும். செயற்கை பம்ப் ஒன்று, இந்த கருவிக்குள், ரத்தத்தை செலுத்தும். அப்படி ரத்தம் செலுத்தப்படும் முன்பாக, ஆக்சிஜனை கலக்கும் ஒரு கருவி வழியாக அந்த ரத்தம் பாயும். அப்போது உரிய ஆக்சிஜன் ஏற்றப்ட்டு, உடலுக்குள் ரத்தம் செய்வது உறுதி செய்யப்படும்.

சுவாச கோளாறால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்போது, இது பயன்படுத்தப்படுகிறது.

இதுதான் சிகிச்சை முறை

இதுதான் சிகிச்சை முறை

எக்மோ என மருத்துவ உலகினரால் ஷாட்டாக அழைக்கப்படும், இந்த சிகிச்சை நடைமுறை குறித்த துல்லிய தகவல்கள் இதுதான்:

கெட்ட ரத்தத்தை அதாவது, கார்பன் டையாக்சைடு கலந்த ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட, ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தை உடலுக்குள் செலுத்த ஆக்சிஜெனரேட்டர் என்ற உபகரணத்தை பயன்படுத்துகிறார்கள் நிபுணர்கள். இது ஒரு காற்று மாற்று கருவியாகும்.

பம்ப் போன்ற கருவி மூலம், ரத்தத்தை வெளியே எடுத்து, அதில் ஆக்சிஜனை கலந்து மீண்டும், மத்திய நரம்பு மூலமாக அதை செலுத்தும் நடைமுறைக்கு பெயர் வெனோவெனஸ் எக்மோ என அழைக்கப்படுகிறது. இது காற்று மாற்று செயல்பாடு மட்டுமே. நரம்பு வழியாக வெளியே எடுக்கப்படும் ரத்தம், மீண்டும், arteryவுக்குள் செலுத்தப்படும் நடைமுறைக்கு பெயர் வெனோரடேரியல் எக்மோ. இஇவ்விரு செயல்பாடுகள் மூலம், சுவாசப்பிரச்சினை, ரத்தம் உந்தி தள்ளப்படும் பிரச்சினை ஆகிய இரண்டும் தீர்க்கப்படும். அதாவது சுவாச பிரச்சினைக்கு காரணமான நுரையீரலின் மோசமான செயல்பாடு, ரத்தத்தை உந்தி தள்ளும் பிரச்சினைக்கு காரணமாக இதய பிரச்சினை ஆகியவற்றுக்கு இது தீர்வாக அமைகிறது. கிட்டத்தட்ட இதயம் மற்றும் நுரையீரலுக்கு மாற்றுதான் இந்த சிகிச்சை.

ரத்த ஓட்ட அளவு, ஆக்சிஜனேட்டர் மூலம் செலுத்தப்படும் ஆக்சிஜன், இயல்பான நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் அளவு இவை அனைத்தையும் சீராக பராமரிக்க வேண்டியது, தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

இது ஒருவகை

இது ஒருவகை

இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல, ரத்த ஓட்டம் குறைந்த நிலையில், அதை மத்திய நரம்பு மூலமாக வெளியே எடுத்து, ஆக்சிஜன் ஏற்றி, அது மீண்டும் மத்திய நரம்பு மூலம் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது, ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ரத்தமானது, உடலுக்குள் செல்லாமல், மீண்டும், கருவிக்கே திரும்பிவரும் வாய்ப்பு உள்ளளது. அதைத்தான், படத்தில் ஊதா கலர் அம்பு குறி காட்டுகிறது.

முக்கிய நரம்பில் இரட்டை துளை

முக்கிய நரம்பில் இரட்டை துளை

இரட்டை டியூப் மூலம், கழுத்திலுள்ள தலையை இணைக்கும் முக்கிய நரம்பில் துளையிட்டு, அசுத்த ரத்தம் அதாவது கார்பன் டையாக்சைடு ரத்தம் வெளியேற்றப்பட்டு, சுத்த ரத்தம் அப்படியே உள்ளே அனுப்பப்படும். ஓரளவுக்கு இதயம் சீராக செயல்படும் நோயாளிகளுக்கு, காற்று மாற்று கருவி தேவைப்பட்டாலும், தேவைப்படாவிட்டாலும், இந்த சிகிச்சை முறை உதவும்.

இயல்பான ஓட்டம்

இயல்பான ஓட்டம்

இந்த வகை எக்மோ சிகிச்சைப்படி, இருக்கும் இதய துடிப்பு அளவு மற்றும் நுரையீரல் செயல்பாட்டை வைத்து ரத்த ஓட்டம் வெளியேற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு திரும்பவும் உடலுக்குள் அனுப்பப்படும். ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ரத்தம், சிவப்பு அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. சரியாக ஆக்சிஜன் ஏற்றம் செய்யப்படவில்லையெனில் உடல் அதை தடுக்க முற்படும். அது ஊதா வண்ண அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. இதய துடிப்புக்கு ஏற்ப ரத்த வேகமும் இருக்கும்.

English summary
When doctors at the Appolo hospital in Chennai said that Tamil Nadu chief minister who suffered a cardiac arrest was being put on heart assist, they also said that the next 12 hours would be crucial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X