ஜெ. உதவியாளர் பூங்குன்றனிடம் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். பூங்குன்றன் வீட்டில் 9-ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அடையாறில் வசித்துவருகிறார். போயஸ்கார்டன் ஜெயலலிதா வீட்டில் இவருக்கு தனி அறை உண்டு.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பூங்குன்றன். இவரது அப்பா புலவர் சங்கரலிங்கம். இவர் சசிகலாவுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர். அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியாகவும் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் சசிகலா.

நமது எம்ஜிஆர் வெளியீட்டாளர்

நமது எம்ஜிஆர் வெளியீட்டாளர்

ஜெயலலிதாவின் சொத்துக்களைப் பராமரிக்கும் வேலைகளைக் கவனித்துவருகிறார். நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இவர், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் வெளியீட்டாளர் என்பதால் இவரது வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

நமது எம்ஜிஆர் வெளியீட்டாளர்

நமது எம்ஜிஆர் வெளியீட்டாளர்

ஜெயலலிதாவின் சொத்துக்களைப் பராமரிக்கும் வேலைகளைக் கவனித்துவருகிறார். நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இவர், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் வெளியீட்டாளர் என்பதால் இவரது வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதாவிடம் நம்பிக்கை

ஜெயலலிதாவிடம் நம்பிக்கை

தொடக்க காலத்தில் இருந்தே தனது ஆசிரியரின் குடும்பத்தின் மீது சசிகலாவுக்கு பாசம் உண்டு. அந்த அடிப்படையில்தான் பூங்குன்றனை வேலைக்கு வைத்தார் சசிகலா.
முதல்வரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கினார் பூங்குன்றன்.

பூங்குன்றனின் பணி

பூங்குன்றனின் பணி

ஜெயலலிதாவைச் சந்திக்க வருபவர்கள் யாரும் பூங்குன்றனைக் கடந்து செல்ல முடியாது என்ற நிலை இருந்து வந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வருகிறார் பூங்குன்றன். நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாக பொறுப்பு முதல் அனைத்துப் பணிகளையும் அவர்தான் கவனிக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் தினசரி போயஸ்கார்டன் சென்றுவருகிறார். வீட்டுக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படித்து, கடிதம் எழுதுவது இவரது வேலை.

பூங்குன்றனிடம் விசாரணை

பூங்குன்றனிடம் விசாரணை

நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர் என்ற முறையில், சசிகலா கைதுக்குப் பிறகு, பூங்குன்றன் இந்த நாளிதழுக்கு முழுப் பொறுப்பு வகித்து வந்தார். அவரிடம், பணப் பரிவர்த்தனை தொடர்பாகக் கேள்வி எழுப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

பூங்குன்றன் ஆஜர்

பூங்குன்றன் ஆஜர்

விசாரணைக்கு ஆஜராகுமாறு பூங்குன்றனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில் இன்று பூங்குன்றனர் ஆஜரானார். கடந்த சில ஆண்டுகளில் பூங்குன்றன் செய்துள்ள முதலீடுகள், அவர் பெயரில் உள்ள சொத்துகள் பற்றி விசாரணை நடைபெற்றுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Officials of the Income Tax Department on Monday grilled Former Chief Minister J.Jayalalithaa secretary Poongudran.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற