For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பல்லோ மருத்துவமனையில் தமக்கான உணவை எழுதிக் கேட்கிறார் ஜெ.!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தனக்கு வேண்டிய உணவை எழுதிக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பிசியோதெரிபி நிபுணர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இத்தனை நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகளும் அகற்றப்பட்டுள்ளது.

உணவு

உணவு

ஜெயலலிதா தனக்கு என்ன உணவு வேண்டும் என்பதை எழுதிக் கேட்ட வாங்கி சாப்பிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு குழாய் மூலம் உணவு அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

நலம்

நலம்

ஜெயலலிதா நம்மை போன்று சாதாரணமாக சாப்பிடத் துவங்கியுள்ளாராம். அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அறிக்கை

அறிக்கை

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த மாதம் 21ம் தேதி தான் கடைசியாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து அடுத்த 4 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
Jayalalithaa has been writing down her own menu and is fully conscious. She has been taken off sedation from the third week of October and has remained fully conscious since then, sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X