For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டு போட லீவ் தராத நிறுவனங்கள் கபாலி பார்க்க லீவ் விடுவது ஏன்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : 'கபாலி' திரைப்படத்தை பார்ப்பதற்காக, பலரும் கபாலி காய்ச்சலில் நெருப்பாக சுடுவதாக கூறி விடுமுறை விண்ணப்பம் அளித்து வருவதால் பல நிறுவனங்கள் தாங்களே முன் வந்து விடுமுறை அளித்து ஊழியர்களை மகிழ்ச்சி என்ற பஞ்ச் வசனத்தை கூறவைத்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போட விடுமுறை தராத நிறுவனங்கள், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விடுமுறை தராத நிறுவனங்கள், கபாலி திரைப்படம் பார்க்க விடுமுறை, சலுகைகள் அளிப்பது மிகவும் வேதனையாக இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

'கபாலி' திரைப்படம் வரும் 22ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பலருக்கும் கபாலி பீவர் பிடித்து ஆட்டுவதால் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

கபாலி திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியை பார்க்க பலரும் ஆவலாக இருக்கின்றனர். ஆள் ஆளுக்கு பல விதங்களில் விடுமுறை கேட்டு விண்ணப்பம் அளிப்பதால் உயரதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

நிலைமையை சமாளிக்க பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் அதையும் தாண்டி, தியேட்டர்களில் ஒரு காட்சிக்கான மொத்த டிக்கெட்டுகளை வாங்கி, தங்களது நிறுவன ஊழியர்கள் மொத்தமாக சென்று கபாலி திரைப்படத்தை பார்த்து மகிழ ஏற்பாடு செய்து வருகிறது.

கபாலி திரைப்படத்தை பார்க்க ஊழியர்கள் பலர் விடுமுறை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய ஒரு நிறுவனம், தாங்களே முன்வந்து, நிறுவனத்திற்கு விடுமுறை விடுத்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் தமிழக தேர்தலுக்கு ஓட்டு போட விடுமுறை தராத நிறுவனங்கள், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விடுமுறை தராத நிறுவனங்கள், கபாலி திரைப்படம் பார்க்க விடுமுறை, சலுகைகள் அளிப்பது மிகவும் வேதனையாக இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

English summary
The countdown for the much anticipated movie 'Kabali' has started ticking. Since the movie is releasing on July 22, a working day, die-hard fans of Rajinikanth are applying for leave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X