வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை கொண்டு, தீ வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்களை எரிக்க பாக்கெட் சாராயம் பயன்படுத்தப்பட்டதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன சேலம் மாணவி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 13ஆம் தேதி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

போலீசார் காயம்
பலியான மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் சிறிதாக தொடங்கிய இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட நிலையில் கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்பட 67 போலீஸார் காயமடைந்தனர்.

தீவைத்து எரிப்பு
மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இந்த வன்முறையில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை கொளுத்தப்பட்டன. பள்ளியின் கட்டிடங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை
கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 300ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளியின் கட்டிடங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர விசாரணை
தனியார் பள்ளிக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு எதிரான போராட்டத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு விடுத்தவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு எப்படி தீ வைக்கப்பட்டது, போராட்டக்காரர்களுக்கு தீ வைக்கும் அளவிற்கு எப்படி பொருட்கள் கிடைத்தது என ஆராய்ந்து வருகின்றனர்.

பாக்கெட் சாராயம்
இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை பேருந்துகள் மற்றும் பள்ளி அலுவலகத்தில் தூக்கி வீசி அதன் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு வீடியோவை கைப்பற்றிய போலீசார் அது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய பாக்கெட் கிடைத்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடத்தியுள்ளனர்.
Recommended Video

சாராய பாக்கெட்டுகள்
தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோத பாக்கெட் சாராய பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட திண்டிவனம் அருகே புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications