களத்தில் குதித்தார் கமல்.. 4 மாவட்ட ரசிகர்களுடன் தீவிர ஆலோசனை.. பிப். 21 முதல் அரசியல்!
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Recommended Video

சென்னை: அரசியல் பயணத்திற்கு முன்னோட்டமாக நான்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகர் கமல். இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டும் இருந்தால் போதாது.

இங்கு தலைவன் என்பவன் வழி நடத்த மாத்திரமன்று. பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும்.
பின் தொடர்வதற்கே ஒரு தலைமை ஒரு தலைமை பொறுப்பு இருக்க வேண்டும் நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா..? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா..? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திருங்கள். களத்தில் சந்திப்போம் என்று கூறியிருந்தார் கமல்.
இந்த பயணத்திற்கு திட்டமிடுவது குறித்து நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் இன்று ஆலோசனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மாவட்ட ரசிகர்களுடன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நடிகர் கமல் வருகிற பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் தனது கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செல்கிறார். இந்த பயணத்திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயண ஏற்பாடுகள் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications