For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட்: உங்களுக்கு துணையாய் மக்களும் கண்காணிக்க துவங்கிவிட்டார்கள்.. கமல் வாழ்த்து!

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

Kamal haasan greets Tamil Nadu Pollution control board

இதையடுத்து பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் உரிமம் புதுப்பிப்புக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்திருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டியுள்ளார். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு.

இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்கு துணையாய் மக்களும் கண்காணிக்க துவங்கி விட்டார்கள். இவ்வாறு கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Makkal Needhi Maiam party leader Kamal haasan welcomes Tamil Nadu Pollution control board for rejecting demand for renewing the license of the Sterlite plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X