காரைக்குடி மாணவர்களின் அசத்தலாம் வாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று( 07.08.2017) ஆறாம் வகுப்பு மாணவர்களின் "அசத்தலாம் வாங்க"இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.

இப்போட்டிக்கு தலைமையாசிரியர் ஆ.பீட்டர் ராஜா தலைமையேற்றார். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் அனைவரையும் வரவேற்றார். மாணவர்களின் பன்முகத் திறன்கள் வெளிப்படும் விதத்தில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

Karaikudi Ramanathan Chettiyar school students hold Asathalam Vaanga programme

இப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் தகுதிச் சுற்றில் 60 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். அம்மாணவர்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்பட்டு, இறுதிச் சுற்றிற்கு 20 மாணவர்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டது.

Karaikudi Ramanathan Chettiyar school students hold Asathalam Vaanga programme

இப்போட்டியில், மாணவர்கள் நடனம், பாடல், நாடகம், கராத்தே சிலம்பாட்டம் போன்ற கலைகள் மூலம் தங்களது தனித் திறன்களை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை மாணவிகள் சமீரா பர்வீன் மற்றும் ஆசிபா தொகுத்து வழங்கினர். மாணவர்களே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது, இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

Karaikudi Ramanathan Chettiyar school students hold Asathalam Vaanga programme

ஆசிரியர் ஜாய்சி மற்றும் லீலா இப்போட்டிக்கு நடுவர்களாக இருந்து மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் பிரியா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.

Karaikudi Ramanathan Chettiyar school students hold Asathalam Vaanga programme

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karaikudi Ramanathan Chettiyar municipal high school students participated in Asathalam Vaanga programme in the school premise.
Please Wait while comments are loading...