நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொண்டர்களை நாளை சந்திக்கிறார் கருணாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தைப் பொங்கலையொட்டி, தொண்டர்களை நாளை சந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.

தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. பொங்கல் நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது திமுக வழக்கம். இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, தனது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Karunanidhi will meet party men tomorrow

கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தொண்டர்களுடன் சந்திப்பு நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருந்ததாக மருத்துவர்கள் கூறியதால் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், கருணாநிதி நாளை நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் முறையாக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தொண்டர்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On the occasion of Pongal Festival, DMK chief Karunanidhi will meet party men tomorrow at his Gopalapuram house. Karunanidhi has not been able to meet his party men for over a year now due to ill health.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற