For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.விடம் இருப்பது கருணாநிதியிடம் இல்லை: கருணாநிதியிடம் இருப்பது ஜெ.விடம் இல்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்துள்ளனர். அதில் கருணாநிதி தன்னிடம் கார் உள்ளிட்ட வாகனம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா தன் வசம் 9 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களம் பரபரபப்பான கட்டகத்தை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவதால் அக்னி வெயிலோடு பிரச்சாரத்திலும் அனல் பறக்கிறது.

ஒரே நாளில் மூன்று முதல்வர் வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இருவருமே ஒரே பத்திர விற்பனையாளரிடம் வாங்கிய பத்திரத்தில்தான் தங்களின் சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளனர். வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்ட விபரங்களில் பல சுவாரஸ்ய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஃபேஸ்புக் ,டுவிட்டர் அக்கவுண்ட்

ஃபேஸ்புக் ,டுவிட்டர் அக்கவுண்ட்

சமூக வலைத்தளங்களில் தான் இயங்கி வருவதாகவும், ஃபேஸ்புக், டுவிட்டரில் அக்கவுண்ட் உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. ஆனால் தான் சமூக வலைத்தளங்களில் இயங்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

சொத்து இல்லை, கடனும் இல்லை

சொத்து இல்லை, கடனும் இல்லை

தனக்கு அசையா சொத்து இல்லை என்றும் தனது பெயரில் வங்கிக் கடனோ, காரோ, வேளாண் நிலமோ இல்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜெ. கடன் ரூ. 2.04 கோடி

ஜெ. கடன் ரூ. 2.04 கோடி

அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 41.63 கோடி ரூபாய், அசையா சொத்துக்களின் மதிப்பு, 72.09 கோடி ரூபாய், கடன் 2.04 கோடி ரூபாய் உள்ளது என்று கூறியுள்ளார்.

கார்கள் இல்லை

கார்கள் இல்லை

கருணாநிதி தன்னிடம் கார் உள்ளிட்ட வாகனம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதா தன் வசம் 9 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வழக்குகள் எத்தனை

வழக்குகள் எத்தனை

ஜெயலலிதா பெயரில், ஐந்து வழக்குகள் உள்ளன. கருணாநிதியோ, நீதிமன்றத்தால் தண்டனை ஏதும் அளிக்கப் படவில்லை என்றும் நிலுவையில் உள்ள திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான வழக்குகளையும் அதன் செக்‌ஷன்களையும் குறிப்பிட்டு உள்ளார். இதில் மட்டும் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது.

English summary
Here is the list of Jayalalitha and Karunanidhi assets details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X