நெல்லை பெருமக்களே .. விரைவில் திமுகவில் இணைகிறார் கருப்பசாமி பாண்டியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: ஒரு வருடத்திற்கு முன்பு திமுகவிலிருந்து விலகி ஜெயலலிதா முன்பு அதிமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், மீண்டும் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைய உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொது செயலாளராக பதவியேற்கும் முன் அதிருப்தியாளர்களை கண்டறிந்து சரிகட்டினர் சசிகலா. மேலும், தீபாவுக்கு ஆதரவளித்த சைதை துரைசாமி, கே.பி. முனுசாமியுடன் இருந்த கோ.சமரசம், தினகரனுக்கு எதிராக பேசி வந்த கருப்பு பாண்டியன் உள்ளிட்ட 13 பேரை அதிமுகவின் உயரிய பொறுப்பான அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து தன் பக்கம் கொண்டு வந்தார்.

Karuppasamy Pandian will join DMK soon

இந்தக் காட்சிகள் முடிந்து சசிகலாவுக்கு சிறை என்ற படலம் வந்தவுடன் காட்சிகள் மாறியது. டிடிவி தினகரன் துணை பொது செயலாளராக ஆக்கபட்டார். ஏற்கனவே டிடிவி தினகரனால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு பல துன்பங்களை அடைந்து திமுகவுக்கு சென்றவர் கருப்பசாமி பாண்டியன்.

தற்போது மீண்டும் அவர் தலைமையின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்பதை எண்ணி மனம் நொந்து போனார் கருப்பசாமி. அதனால் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து ராஜினமா செய்தார்.

இந்நிலையில் ஓரங்கட்டி இருந்த வி.கருப்பசாமி பாண்டியன் ஓரிரு நாளில் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார்.

கருப்பசாமி பாண்டியன் டிடிவி தினகரனை எதிர்த்து விலகினாலும் அவரது மகன் வி.கே.பி ஷங்கர் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karuppasamy Pandian will join DMK in front of M K Stalin soon, sources said.
Please Wait while comments are loading...