இவ்வளவு சாப்பாடா? இதுக்கு பேர் உண்ணாவிரதமா?.. மோடியை கிண்டல் செய்யும் குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி இன்று உண்ணாவிரதம் என்று கூறிவிட்டு விமானத்தில் அதிகமாக சாப்பிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.

Khushbu trolls Modi about his hunger strike

சென்னை விமான நிலையம் மூலம் மோடி மாமல்லபுரத்தில் விழா நடக்கும் அரங்கிற்கு வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்ட தொடரை எதிர்க்கட்சிகள் நடத்த விடாமல் செய்ததால் இப்படி உண்ணாவிரதம் இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் சென்னை வந்து இருக்கும் அவரின் நிகழ்ச்சி நிரலில் அவர் காலையும், மதியமும் எங்கு சாப்பிட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதை வைத்து மோடியை குஷ்பு கிண்டல் செய்துள்ளார்.

அதில் ''உண்ணாவிரத நாளில் விமானத்தில் மோடி காலை உணவும், மதிய உணவும் சாப்பிட்டு உள்ளார். உண்ணாவிரத நாளில் இவ்வளவு சாப்பாடா?. உண்ணாவிரதமும் அவர் கூறும் பொய்களில் ஒன்றுதான்'' என்று கிண்டல் செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Khushbu trolls Modi about his hunger strike, by saying ''So on a #upvasdiwas #Modiji has his breakfast on board and lunch on board too..so much for his #Upvas..all bakwas and feku just like his other jhumlas'' in twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற