புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.

கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல்கள் இருந்து வருகின்றன. மாநில உரிமைகளில் கிரண் பேடி தலையிடுகிறார் என்பது முதல்வர் நாராயணசாமி முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டாகும்.

Kiran Bedi's twitter account hacked

நியமன எம்எல்ஏக்களை நியமித்தது, புதுவையில் அவ்வப்போது ஆய்வு செய்வது என்று அதிரடி காட்டி வருகிறார் கிரண் பேடி. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வழக்கம் போல் ஈடுபடும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரிலும் அவர் சில கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இன்றைய தினம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தனது டுவிட்டர் கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளதாக கிரண்பேடி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pondicherry Lieutenant Governor Kiran Bedi's twitter account hacked by some unknown.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற