குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.. 90% காயங்களுடன் போராடிய திவ்யா உயிரிழப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காட்டுதீயில் இறந்து போன மற்றொரு ஜோடி விபின்-திவ்யா-வீடியோ

  மதுரை: குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 90 சதவீத காயங்களுடன் போராடிய திவ்யா உயிரிழந்துள்ளார்.

  தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் சென்னையை சேர்ந்த ஒரு குழுவினரும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினரும் ட்ரெக்கிங் மேற்கொண்டிருந்தனர்.

  சுமார் 36 பேர் இந்த ட்ரெக்கிங் பயணத்தை மேற்கொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையில் இருந்து இறங்கும்போது குரங்கணி வனப்பகுதியில் எதிர்பாரத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டது.

  படுகாயம்

  படுகாயம்

  இதில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  மேலும் 2 பேர் பலி

  மேலும் 2 பேர் பலி

  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிஷா கடந்த 12ஆம் தேதி மாலை உயிரிழந்தார். நேற்று புதுமணப்பெண் திவ்யா விவேக் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

  திவ்யா உயிரிழப்பு

  திவ்யா உயிரிழப்பு

  இதனால் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்த நிலையில் தற்போது திவ்யா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யா 90 சதவீத தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தார்.

  பலி எண்ணிக்கை உயர்வு

  பலி எண்ணிக்கை உயர்வு

  அவரது கணவர் விபின் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இன்று திவ்யாவும் உயிரிழந்தார். இதனால் குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kurangani forest fire death toll has increased as 12. injured Divya died today. Divya's husband Vibin already died in the accident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற