For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட்டாக் பாண்டியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற ஹைகோர்ட் மதுரை பெஞ்ச் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நெல்லை மாவட்டம் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Madurai HC bench orders police to shift Attack Pandi to Madurai jail

பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டியை, மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது மனைவி தயாள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தனது கணவரை, மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதாகவும், ஆனால் போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனால் வழக்கு விசாரணைக்காக அட்டாக் பாண்டியை மதுரை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும்போது, என்கவுன்ட்டரில் அவரை போலீசார் சுட்டுக்கொல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்த தயாள், தனது கணவர் அட்டாக் பாண்டியை மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி தாக்கல் செய்த பதில் மனுவில், வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக, ஐ.ஜி.,யிடம் உடனடியாக ஒப்புதல் பெற முடியாது என்பதால், தாமதத்தை தவிர்க்க, டி.ஐ.ஜி.,யிடம் பேசி, பாண்டியை, நெல்லை சிறைக்கு மாற்ற ஒப்புதல் பெற்றோம்; பின், அதற்கு, ஐ.ஜி.,யும் ஒப்புதல் அளித்தார். உரிய வழிமுறைகளை பின்பற்றி, உயர் அதிகாரிகளின் அனுமதியின் படி, அவனை, நெல்லை சிறைக்கு மாற்றினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை சிறையில் அடைத்தால், பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்றும், 'பொட்டு' சுரேஷின் ஆதரவாளர்கள் ஏதாவது ஒரு வழக்கில் கைதானால், மதுரை சிறையில் அடைக்கும் நிலை ஏற்படலாம்; அப்படி நடந்தால் பாண்டிக்கு ஆபத்து ஏற்படும். இதே வழக்கில் கைதான, 12 பேர், மதுரை சிறையில் உள்ளனர். பாண்டியும், மதுரை சிறையில் இருந்தால், சிறையில், அவனது ஆதரவாளர் கோஷ்டி உருவாகும். நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, நெல்லை சிறையில் அடைத்து உள்ளோம் என்று தமது மனுவில் கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சுபாஷ்பாபு, இளங்கோ வாதிடும்போது, ‘ஒரு கைதியை வேறு சிறையில் அடைக்க சிறைத்துறை ஐ.ஜிதான் உத்தரவிட வேண்டும். ஆனால், டிஜஜியின் உத்தரவின் பேரில் அட்டாக் பாண்டியை பாளை சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினர். இதையடுத்து, 'வேறு சிறைக்கு மாற்றும் நடைமுறைகளுக்கு, ஐ.ஜி., பின்னேற்பு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, அரசு, தனி உத்தரவு ஏதேனும் பிறப்பித்துள்ளதா என்பது பற்றி, வரும், 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அட்டாக் பாண்டியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார். மதுரை சிறையில் அட்டாக் பாண்டிக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

English summary
Madurai HC bench has ordered the police to shift Attack Pandi to Madurai jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X