For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் "மேகி வேட்டை" ஆரம்பம்... 30 இடங்களில் சாம்பிள் எடுக்கப்பட்டது!

Google Oneindia Tamil News

நெல்லை: மேகி நூடுல்ஸ் விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் சாம்பிள் எடுக்கப்பட்டு வருகிறது.

காலை உணவில் நூடுல்ஸ்களும், சேமியா வகை உணவுகளும் வெகுவாக இடம் பிடித்து விட்டன. குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருளாக மேகி நூடுல்ஸ் இருந்து வருகிறது. ஆனால், இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் சேர்க்கப்பட்டிருப்பதாக பிரச்சனை எழுந்தது.

Maggi samples taken in Nellai

உபி அரசின் உணவு பாதுகாப்பு துறை நடத்திய ஆய்வில் இதுகுறித்த விபரங்கள் தெரிய வந்ததை அடுத்து அம்மாநில அரசு மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு கருதி கேரள அரசும் மேகி நூடுல்ஸ்குக்கு தடை விதித்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ்சில் கலந்துள்ள வேதி பொருட்கள் குறித்து உரிய ஆயவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் தலைமையில் மேகி நூடுல்ஸ் உணவு மாதிரி எடுக்கப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் இந்த ஆய்வு நடந்தது. இதில் மாதிரிகள் சோதனைக்காக அனுபபி வைக்கப்படடன.

இதுகுறித்து அவர் கூறுகையில், நெல்லை மாவட்டததில் மொத்தம் 30 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மொத்தம் 30 இடங்களில் மேகி நூடுல்ஸ் உணவு மாதிரி எடுத்து உள்ளோம். இது ஆய்வுக்காக அனுப்பி வைக்கபபடடுள்ளது. இந்த ஆய்வில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளூட்டோமேட் மேகி நூடுல்ஸ்சில கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மேல் நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் முடிவு எடுப்பர் என்றார்.

English summary
Food security officials have taken the samples of Maggi in 30 places for testing in Nellai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X