For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதி பட்டியல் வெளியிட்டதோடு.. வேட்பாளர் நேர்காணலை அறிவித்தது மதிமுக !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று காலை வழங்கப்படும் என்றும் மாலை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மதிமுக 27 தொகுதிகளுக்கு கழக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான வேட்பாளர் விண்ணப்பப் படிவங்கள் இன்று (15.4.2016) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வழங்கப்படும். அதைத்தொடர்ந்து நேர்காணல் நாளை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

MDMK candidate interview today

16.4.2016 அன்று நடைபெறும் வைகோ பிரச்சார சுற்றுப்பயணம் துவக்கும் சென்னை அண்ணா நகரில் காலை 10 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MDMK candidate interview today

நேர்காணல் நடைபெறும் தொகுதிகள் விவரம்:

பூந்தமல்லி, ஆவடி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், பல்லாவரம், திருப்போரூர், ஆற்காடு, செஞ்சி, ஈரோடு மேற்கு, தாராபுரம், பல்லடம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, அரவக்குறிச்சி, திருச்சி கிழக்கு, ஜெயங்கொண்டம், மன்னார்குடி, ஆலங்குடி, காரைக்குடி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, சாத்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாகர்கோவில், பாளையங்கோட்டை, குளச்சல்,.

மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்துள்ளதால் 27 தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறுகிறது.

English summary
MDMK has begins its candidate interview today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X