தமிழக அரசால் நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கோம்ங்க.. கமலை சந்தித்து பால் முகவர்கள் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருக்கிறது என்று சொன்ன நடிகர் கமல் ஹாசனை பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஊழலுக்கு எதிராக நடிகர் கமல் ஹாசன் பேசி வருகிறார். இந்நிலையில், பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி இன்று நேரில் சந்தித்தார்.

Milk Agent association extends its support to Kamal

நடிகர் கமலை சந்தித்தப் பின்னர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம், அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை விரைவில் அறிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்றும், கமல் அரசியலுக்குத் தகுதியான நபர் என இளைஞர்கள் கூறுவதை அவரிடம் நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், கமலும் தமிழக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதே போன்று பால் முகவர்கள் அமைப்பும் தமிழக அரசால் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொன்னுசாமி கூறினார்.

இந்த அடிப்படையிலேயே கமலை சந்தித்ததாகத் தெரிவித்த பொன்னுசாமி, அரசுக்கு எதிரான கருத்துக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Milk Agent association leader met actor Kamal and extended its support to him.
Please Wait while comments are loading...