அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது... ஜெயக்குமார் தடாலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பக்கோடா விற்பது பற்றிய ஜெயக்குமாரின் ஐடியாவை கேளுங்க- வீடியோ

  சென்னை : அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுக என்னும் எஃகு கோட்டையை அசைக்க முடியாது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : அதிமுக அரசை வீழ்த்த கூடியிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முரண்பட்டது. முரண்பட்ட கூட்டணியின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காது. அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமானவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள், தாங்கள் பலவீனமானவர்கள் என்பதைத் தான் மக்களுக்கு அவர்கள் சொல்கிறார்கள்.

  இவர்கள் அறிவிக்கும் போராட்டம் எதுவுமே மக்கள் நலனுக்கானது அல்ல. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக என்ற எஃகுகோட்டையை யாராலும் அசைக்க முடியாது.

  தினகரன் விடும் கதை

  தினகரன் விடும் கதை

  கூடுவாரோடு சேர்ந்தால் கூடா நட்பில் தான் போய் முடியும். அதுபோல திமுக செயல்தலைவருடன் சேர்ந்ததால் ஸ்டாலினின் தாக்கம் தினகரனுக்கு வந்துள்ளது. திரைக்கதை எழுதுவதில் தம்பி ஸ்டாலின் பிரபலமானவர், அந்தத் திரைக்கதையில் தான் தினகரனும் இப்போது கதை விடுகிறார்.

  வாய்ப்பந்தல் போடும் தினகரன்

  வாய்ப்பந்தல் போடும் தினகரன்

  18 பேரில் ஒருவர் தான் முதல்வராம், அதுல 6 பேரை நீக்கனுமாம், வாயில் வடை சுடுபவர் தினகரன். தினகரன் வாய்ப்பந்தல் போடுபவர், இதெல்லாம் நடைமுறையில் நடக்காத ஒன்று. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் சிலர் சிரித்துக் கொண்டே அழுகின்றார், இது தான் தினரகனின் இன்றைய நிலைமை.

  தினகரன் பில்டப் கொடுக்கிறார்

  தினகரன் பில்டப் கொடுக்கிறார்

  தினகரன் அப்படித் தான் பில்டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார், அவர் சொல்வது அனைத்தும் கூட இருக்கும் 4 பேரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாமே ஒழிய நடைமுறைக்கு சாத்தியமில்லை. அது போன்ற நிலையும் ஏற்படாது.

  தினகரனின் தொட்டில் பழக்கம்

  தினகரனின் தொட்டில் பழக்கம்

  எங்களைப் பொறுத்த வரையில் குறுக்கு வழியில் வந்து குறுக்கு சால் ஓட்டியது கிடையாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், இதையெல்லாம் தினகரன் நன்கு கற்றவர். ஆர்கே நகர் தேர்தலில் ஹவாலா முறையில் ரூ. 20 நோட்டை கொடுத்து வெற்றி பெற்ற மமதையில் இருக்கிறார். இன்று ஆர்கே நகர் மக்கள் எங்கே ஹவாலா வெற்றியாளர் என்று தேடிக் கொண்டிருக்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN Minister Jayakumar criticises opposition parties unity against admk government and this opposition didnt suceed and also criticises Dinakaran.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற